மத ஒற்றுமையின் ஊடாகவே இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்

பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் விடயத்தில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். கிராமத்தில் ஒரு பௌத்த குடும்பம் இருந்தாலும் அந்த பகுதியை பௌத்த மக்கள் வாழும் பகுதியாக அடையாளப்படுத்துவதற்கான சட்டம் உள்ளதுஎன்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் புத்தசாசன, வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.  

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  

பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் விடயத்தில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். கிராமத்தில் ஒரு பௌத்த குடும்பம் இருந்தாலும் அந்த பகுதியை பௌத்த மக்கள் வாழும் பகுதியாக அடையாளப்படுத்துவதற்கான சட்டம் உள்ளது. மதங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாகவே இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறான பிரச்சினை உள்ளது.  

வடக்கு, கிழக்கில் கவனத்தை மக்கள் சார்ந்து செயலாற்றுவதைப் பார்க்கும்போது மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். ஆலோசனைகளையும் அமைச்சர் சஜித் பிரேதாசவிடம் முன்வைக்க விரும்புகின்றேன். கடந்த ஒக்டோபர் 26 ஆம் அரசாங்கம் மாறியதைத் தொடர்ந்து உங்களால் வீடமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டவற்றுக்கு 5 இலட்சம் ரூபா பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வீடமைப்புக்கான கொடுப்பனவை 7 இலட்சமாக அதிகரித்துள்ளீர்கள். இவ்வாறான நிலையில் ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகளை அமைப்பதற்கு 5 இலட்சம் ரூபாவே வழங்கப்படுகிறது.

தற்பொழுது கல் மற்றும் மண் விலை அதிகரித்திருப்பதால் அந்த நிதி போதுமானதாக இல்லையென மக்கள் கூறுகின்றனர். எனவே அவ்வாறானவர்களுக்கு மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு கலாசார நிலையங்களை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

Mon, 03/18/2019 - 12:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை