பத்து பிரதான வைத்தியசாலைகளில் பக்கவாத நோய் பிரிவு

நாடளாவிய ரீதியிலுள்ள 10 பிரதான வைத்தியசாலைகளில் பக்கவாதநோய் பிரிவுகளை நிர்மாணிப்பதற்கான அறிவுறுத்தலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன விடுத்துள்ளதாக,  சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.  போதனா வைத்தியசாலையில் புதிதாக  பக்கவாத நோய் பிரிவு 633மில்லியன் ரூபாவிலும் அம்பாறை பொது வைத்தியசாலையில் புதிதாக இந்நோய் பிரிவு  213மில்லியன் ரூபாவிலும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதேவேளை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இந்நோய் பிரிவு 689 மில்லியன் ரூபாவிலும் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இந்நோய் பிரிவு 348 மில்லியன் ரூபாவிலும்    குருநாகல் போதனா வைத்தியசாலையில் இந்நோய் பிரிவு 230 மில்லியன் ரூபாவிலும் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

Thu, 03/21/2019 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை