செனட்டர் மீது முட்டை வீசிய சிறுவனுக்கு குவியும் பாராட்டு

அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டையை மோதி உடைத்த சிறுவனை இணையவாசிகள் புகழ்ந்து எழுதி வருகின்றனர்.

‘முட்டைப் பையன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த சிறுவனின் பெயர் வில்லியம் கோனொல்லி.

50 பேர் கொல்லப்பட்ட நியூசிலந்து பள்ளிவாசல் தாக்குதல்களைப் பற்றி அவுஸ்திரேலிய செனட்டர் ப்ரேஸர் அன்னிங் வெளியிட்ட கருத்துகள் உலக அளவில் கண்டனத்துக்கு உள்ளானது.

அதனால் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கோனொல்லி, செனட்டரின் பின்னால் இருந்து அவர் தலைமீது முட்டை ஒன்றை மோதி உடைத்தான்.

அந்தக் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி, சிறுவனின் துணிவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆரம்பத்தில் அவரைக் கைது செய்த பொலிஸார், பின்னர் அவர் மீது குற்றம் ஏதும் சுமத்தாமல் விடுவித்ததாக ஊடகங்கள் கூறுகின்றன. இருப்பினும், அந்த சிறுவன் எதிர்நோக்கக் கூடிய உத்தேச வழக்கைச் சமாளிப்பதற்காக இணையத்தில் நிதி திரட்டப்பட்டது.

உடனடியாகச் சேர்ந்த 31,000 டொலர், வழக்குச் செலவுக்கு மட்டுமல்ல, “இன்னும் நிறைய முட்டைகள் வாங்குவதற்கும்தான்” என்று இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Tue, 03/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை