இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு

பால்மா விலைச்சூத்திரம் அமுல் 

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிப்பதற்கு  நுகர்வோர் அதிகார சபை அங்கீகாரமளித்துள்ளது.  இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில், புதிய விலைச்சூத்திரத்துக்கமைய பால்மாக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
அதற்கமைய, ஒரு கிலோகிராம் பால்மா 60 ரூபாவினாலும் 400 கிராம் பால்மா 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒரு கிலோகிராம் பால்மா 920 ரூபாவுக்கும் 400 கிராம் பால்மா 370 ரூபாவுக்கும் விற்பனையாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கு உரிய தீர்வு காணும் பொருட்டு நியமிக்கப்பட்ட குழுவினால் சர்வதேச சந்தையில் நிலவும் விலை மற்றும் பரிமாற்ற வீத வேறுபாடுகளை கருத்தில் கொண்டு, நுகர்வோர் அரசாங்கம் மற்றும் பால்மா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளோர் பயனடையும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு உத்தேச விலைச் சூத்திரமொன்று பரிந்துரை செய்யப்பட்டது.

கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் அதற்கான புதிய உத்தேச விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

Sun, 03/17/2019 - 10:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை