ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க வேட்பாளரே வெற்றி பெறுவார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே. கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெறுவது உறுதியென கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.  

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இக்காலங்களில் எங்கும் பேசப்பட்டு வருகின்றது. பொதுஜன பெரமுன வேட்பாளர் தேர்வில் ராஜபக்ஷ குடும்பத்தினரே அத்தெரிவுகளை மேற்கொள்வர்.  

‘ராஜபக்ஷ கம்பெனியை விடுத்து வேறு எவரும் பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கப் போவதில்லை, வேறொரு வேட்பாளரும் அக்கட்சியில் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்காக செயற்குழு கூடி தீர்மானிக்கும். செயற்குழு பேச்சுவார்த்தையின் பின்னர் அனைவரினதும் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயக ரீதியில் ஐ.தே.க வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்கிணங்க ஐ.தே.க. தலைவர்கள் தொடர்பில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.  

அண்மையில் ஊடக நிறுவனமொன்று ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவர் உள்ளதாக ஒரு பிரசாரத்தை கிளப்பியிருந்தது. கட்சியின் பொதுச் செயலாளரென்ற வகையில் அத்தகைய செய்தியை தான் வெளியிடவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.  

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமது கருத்தை கோரியிருந்த போதும் வேறு கட்சியில் இரு அபேட்சகர்கள் இருந்தாலும் ஐ.தே. கட்சிக்கே வெற்றி கிட்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.    

Wed, 03/27/2019 - 08:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை