குக் தீவுகளின் பெயரை மாற்றுவதற்கு திட்டம்

பசிபிக் சிறு நாடான குக் தீவுகள் தனது நாட்டின் பெயரை பொலிநேசியன் கலாசாரத்தை பிரதிபலிப்பதாக மாற்றுவதற்கு ஆலோசித்துள்ளது.

நியூசிலாந்தில் இருந்து வடக்காக சுமார் 3000 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் 15 தீவுக் கூட்டத்தைக் கொண்ட இந்த நாட்டுக்கு புதிய பழங்குடி பெயர் ஒன்றை தேர்வு செய்ய அரசு கடந்த ஜனவரி மாதம் குழு ஒன்றை நியமித்தது.

குக் தீவு தனது நாட்டின் பெயரை மாற்றுவதற்கு முயற்சிப்பது இது முதல் முறையல்ல. 1994 ஆம் ஆண்டு அந்த நாட்டின் பெயரை அவைகி நுயி என்று மாற்றுவதற்கு நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த நாடுகாண் பயணியான ஜேம்ஸ் குக்கின் பெயரே குக் தீவுகளுக்கு வைக்கப்பட்டுள்ளது.

1888 தொடக்கம் 1900 ஆம் ஆண்டு பிரிட்டன் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியாக இருந்த குக் தீவுகள், நியூசிலாந்து அதிகார எல்லைக்குள் வந்தது.

1965 ஆம் ஆண்டு அந்த தீவுகள் சுதந்திரம் பெற்றபோதும் நியூசிலாந்து அந்த நாட்டின் வெளிவிவகாரங்களுக்கு தொடர்ந்து பொறுப்பாக இருப்பதோடு அந்நாட்டு பிரஜைகள் நியூசிலாந்தில் தங்க மற்றும் பணி புரிய அனுமதிக்கிறது.

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை