தாய்லாந்து தேர்தல்: இராணுவ ஆதரவுடைய கட்சி முன்னிலை

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவம் ஆட்சியைப் பிடித்த பின்னர் தாய்லாந்தில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதமாக இராணுவ ஆதரவுடைய அரசியல் கட்சி ஒன்று முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின் 90 வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ப்ளங் ப்ரச்சா ராத் கட்சி 7.6 மில்லியன் வாக்குகளை வென்றிருப்பதோடு, இது எதிர்க்கட்சியான பியு தாய் கட்சியை விடவும் அரை மில்லியன் அதிக வாக்குகளாகும்.

முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ராவுடன் தொடர்புடைய பியு தாய் கட்சி 2001 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போதைய தலைவரான ஜெனரல் பிரயுத் சான் ஒச்சாவின் கீழ் ப்ளங் ப்ரச்சா ராத் கட்சி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு தக்சினின் சகோதரி யிங்லுக் ஷினவாத்ரா அரசுக்கு எதிரான இராணுவ சதிப்புரட்சிக்கு சான் ஒச்சா தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 03/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை