நோர்வே இராஜாங்க செயலர் இன்று இலங்கை வருகை

நோர்வே வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் இராஜாங்க செயலாளர் மெரியான் ஹேகன் இருநாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் காணாமற் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆணைக்குழு சிவில் பிரதிநிதிகள், மனித உரிமை ஆணைக்குழு சிவில் சமூக மற்றும் வர்த்தக பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்.

இன்று முற்பகல் 11.30இற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் அவர் சந்திக்கின்றார். அதேநேரம், அவரது விஜயம் இரு நாடுகளுக்குமிடையில் பொது அக்கறையுடன் கூடிய வர்த்தகம், சுகாதார சூழலுடன் கூடிய கடல், உலக ஒழுங்கு மற்றும் பேண்தகு அபிவிருத்தி ஆகியவை பற்றி பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இலங்கையில் யுத்தத்தின் பின்னர் இடம்பெறும் இன நல்லிணக்கம், நீதித்துறை தொடர்பான இலங்கையின் முக்கியமான செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்படும். 2018 இல் கண்ணிவெடித் தடை தொடர்பான தலைமைத்துதவத்தை நோர்வே ஏற்றுக்கொண்டுள்ளதால் நோர்வே இராஜாங்க அமைச்சர் வடக்கில் கண்ணிவெடி அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கும் விஜயம் செய்யவிருக்கிறார்.

மாலைதீவுக்கான இரண்டு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டே நோர்வே இராஜாங்க அமைச்சர் இன்று இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Tue, 03/05/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக