முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்கள் போன்று அரசியலிலும் முன்னேற வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான்

கொழும்பு மாநகர சபையில்  30 பேர்  பெண் பிரநிதிகளாக உள்ளனா். அதே போன்றுதான் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபையிலும் அரசு 25 வீதமாக பெண்களுக்கு சா்ந்தா்ப்பம் வழங்க உள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள 225 பேர்களில் 60 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களாவது அங்கத்துவம் வகிக்க வேண்டும். ஆகவே தான் முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்கள்போன்று கல்வித்துறையில் அரசியலிலும் முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான் தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லுாரியின் பரிசலிப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்லூரியின் அதிபா் நஸ்ரியா முனாஸ் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது;

இக் கல்லுாரியில்  4000 மாணவிகளும், 150 ஆசிரியைகளையும் கொண்டு தலைநகரில் முஸ்லிம்களுக்கென உள்ள ஒரே ஒரு மகளிர்  தேசிய பாடசாலையாக முஸ்லிம் மகளிர் கல்லூரி விளங்குகின்றது. இலங்கையின் அரச தனியார் நிர்வாகத்தில் 60 வீதமாக பெண்களே உயா் பதவி தொட்டு சாதாரண பதவிகளிலும் சேவையாற்றி வருவதை காணக்கூடியாதாக உள்ளது.

பெண்கள் கல்வியில் பெரிதும் முன்னேற்றம் கண்டு சிறந்த நிர்வாகிகளாக விளங்குகின்றனா். ஆசிரியா் சேவையிலும், ஆண்கள் பாடசாலைகளிலும் கூட 60 வீதமாக ஆசிரியைகளே உள்ளனா். ஆகவே தான் பெண்கள் தொழில் ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் சிறந்து மக்கள் பிரநிதியாகவும் வரல் வேண்டும்.

இக் கல்லூரியில் அதிபராக இருந்த ஆயிசா ரவுப் கொழும்பு மாநகர சபை தேரதலில் போட்டியிட்டு மக்கள் பிரநிதியாக பதவி வகித்து கொழும்பு வாழ் மக்களுக்குச் சேவையாற்றியுள்ளார். கொழும்பு மாநகர சபையில் 30 பேர் பெண் பிரநிதிகளாக உள்ளனா். அதே போன்றுதான் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபையிலும் அரசு 25 வீதமாக பெண்களுக்கு சா்ந்தா்ப்பம் வழங்க உள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள 225 பேர்களில் 60 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களாவது அங்கத்துவம் வகிக்க வேண்டும். ஆகவே தான் முஸ்லிம் பெண்கள் ஏனைய சமமூகங்கள்போன்று கல்வித்துறையில் அரசியலிலும் முன்னேற முன்வருதல் வேண்டும் என்றார்.

(அஷ்ரப் ஏ சமத்)

Sun, 03/03/2019 - 18:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை