கிண்ணியா, முஸ்லிம் மகளிர் ம.வி. தேசிய பாடசாலையாக தரமுயர்வு

திருகோணமலையின் முதல் முஸ்லிம் தேசிய பாடசாலையாக கிண்ணியா,முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் தரமுயர்தப்படுகிறது. நீண்டகாலமாக திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலையொன்று இல்லாத குறைபாட்டை கருத்திற்கொண்டு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மேற்கொண்ட தொடர் முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது.

இதற்கான கடிதம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடமிருந்து கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி நாதீரா அமீன் வாரி, நேற்று (13) புதன்கிழமை பிற்பகல் கல்வி அமைச்சில் உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரும் இம்ரான் மகரூப், கிண்ணியா வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் அமீன் வாரி, மற்றும் இக் கல்லூரி ஆசிரியர்களும் காணப்படுகின்றனர்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Thu, 03/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை