தென் கொரியா - அமெரிக்காவின் பெரும் போர் ஒத்திகை நிறுத்தம்

வட கொரியாவுடனான அமைதி முயற்சிக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா தமது மிகப்பெரிய அளவிலான கூட்டு போர் ஒத்திகையை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளன.  

சிறிய அளவிலான போர் ஒத்திகை தொடர்ந்து நடைபெறும் என்றபோதும், பெரிய அளவிலான போர் பயிற்சிகள் நடைபெறாது என குறிப்பிடப்பட்டுள்ளது.  

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையிலான முதலாவது சந்திப்பை அடுத்து கடந்த ஆண்டிலும் இந்த போர் ஒத்திகையில் பெரும் எண்ணிக்கையிலான ஒத்திகைகள் இடைநிறுத்தப்பட்டன.  

இந்த போர் ஒத்திகை தமது நாட்டின் மீதான ஆக்கிரமிப்புக்கான முயற்சி என்று வட கொரியா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது.  போல் ஈகல் மற்றும் கீ ரிசோல்வ் போர் ஒத்திகைகளை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளினது பாதுகாப்பு அமைச்சர்கள் இணங்கியதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த ஒத்திகை நிரந்தரமாக நிறுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை. 

தென் கொரியாவில் சுமார் 30,000 அமெரக்க துருப்புகள் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

Mon, 03/04/2019 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை