மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

வீடுகள் மற்றும் அரச அலுவலங்களில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் யோசனையொன்றிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு, நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 3 மாதங்களுக்கு வீடுகளில் 2 மின்குமிழ்களை அணைப்பதற்கும் அரசாங்க அலுவலகங்கள், மத ஸ்தலங்கள், வர்த்தக நிலையங்களில் மின் பாவனையை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கும், அநாவசியமான வீதி விளக்குகளை அணைத்தல்; மற்றும் வழமையாக வீதி மின் விளக்குகளை அணைக்கும் நேரத்திற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக அணைத்தல் போன்ற விடயங்களின் மூலம் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தல் ஆகியவை தொடர்பாக அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைக்கு    அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Wed, 03/27/2019 - 16:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை