கிராமிய விஹாரைகளை மேம்படுத்த கம்பெரலிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை

கமபெரலிய திட்டத்தினூடாக கிராமங்களை முன்னேற்றமடைய செய்வதுடன் கிராமத்திலுள்ள விஹாரைகளை மேம்படுத்தவும் நான்கு அரச நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை நேற்று (18) கெக்கிராவை, மாஎல்கழுவ ஸ்ரீதேவதிஸ்ஸ ரஜமஹா விஹாரையில் பூரணமான விஹாரை கட்டடமொன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியபோதே தெரிவித்தார்.

அங்கு விஹாரையின் அலுவலகத்தை சுற்றி அமைக்கப்பட்ட தங்க வேலியையும் திறந்து வைத்தார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில, கலாசார முக்கோணம், ஜனாதிபதி நிதியம், புத்த சாசன அமைச்சு மற்றும் பிரதமர் காரியாலயம் என்பவற்றின் மூலம் விஹாரைகளை மேம்படுத்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நகரங்களுக்கு இணைந்ததாக கிராமங்களில் விஹாரைகள் மேம்படுத்தப்படுவதில்லை. அதன் காரணமாகவே இம்முடிவை எடுத்ததாகவும் பிரதமர் கூறினார்.

கம்பெரலிய திட்டம் மூலம் கிராமப்புற விஹாரைகளை மேம்படுத்த நேரடியாக நிதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். கடந்த அரசாங்கம் பொறுப்பின்றி கடன் வாங்கியமையால் அதனை அப்பாவி மக்களின் வரிமூலம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

Tue, 03/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை