வடக்கு, கிழக்கு, மலையகத்திலும் தேசிய பாடசாலைகள் அதிகரிக்கப்பட வேண்டும்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளிலும் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேணடும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு மொழி தொடர்பிலான இடர்பாடுகளை நீக்குவது  அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று கல்வியமைச்சு மற்றும் உயர் கல்வியமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்நதும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் :- யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பிரதேசத்தில் கல்வித் துறை முன்னேற்றத்திற்கு விசேட கவனம் செலுத்த வேண்டும். மலையக கல்வி முன்னேற்றத்திலும் கூடுதல் கவனம் தேவை. கல்வி அமைச்சின் கீழுள்ள ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும், வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் இடம்பெயர்ந்த முஸ்லிம் மாணவர்களினதும் கல்வி அபிவிருத்திக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை தீர்க்க மொழி தொடர்பான இடர்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் ஒவ்வொரு மாவட்டதிலும் தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கிலும் மலையகத்திலுமுள்ள தேசிய பாடசாலைகளின் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Sat, 03/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை