அவுஸ்திரேலிய எய்ட் அனுசரணையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு பயிற்சி

முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் உல்லாச பிராயணத்துறையில் தேர்ச்சி பெற்று விளங்கவும், அத்துறையின் ஊடாக சிறந்த வருமானத்தினை பெற்றுக்கொள்வதற்கும் தேவைாயன நடவடிக்கையினை அவுஸ்திரேலிய எய்ட் நிறுவனத்தின் "திறன்களை உயர்த்தும் திட்டத்தின்" ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திலிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 20முச்சக்கர வண்டி ஓட்டுநர்களை உல்லாச வழிகாட்டிகளாக பயிற்றுவிக்கும் நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முன்தினம் (04) அறுகம்பே மைதானத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சி நெறியின் பின்னர், பதிவு செய்யப்பட்ட உல்லாச வழிகாட்டிகளாக செயற்படுவதுக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக செயற்றிட்டத்துக்கு பொறுப்பான மாவட்ட இணைப்பாளர் யு.எல்.சம்சுதீன் குறிப்பிட்டார்.

குறித்த அங்குரார்ப்பண நிகழ்வுக்கு அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் விக்டோரியா கூக்கிளி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, பொத்துவில் பிரதேச செயலளார் எம்.ஏ.சி. நசீல், பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.வாசித் மற்றும் ஸ்கோப் குளோபல் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் அன்ரூவ் பிரொன், திறன்களை உயர்த்தும் திட்டத்தின் குழுத்தலைவர் டேவிட் அல்பேர்ட் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏச்.ஈ.ஓ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மேற்பார்வையில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் தெரிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிகர்களும் ஒட்டப்பட்டன.

(ஒலுவில் மத்திய விசேட நிருபர் - ஏ.சி. ரிஷாட்)

Wed, 03/06/2019 - 15:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை