காசல்ரீ நீர்த்தேக்கத்தில் ஒரு இலட்சம் இறால் குஞ்சுகள்

நன்னீர் மீன்வளர்ப்பு திணைக்களத்தினால் ஒரு இலட்சம் இறால் குஞ்சுகள் காசல் ரீ நீர்தேக்கத்தில் இடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் போஷா க்கு மற்றும் வருமானத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நன்னீர் மீன்வளர்ப்பு திணைக்களத்தினால் காசல் ரீ நீர்தேக்கத்தில் ஒரு இலட்சம் இறால் குஞ்சிகள் இடப்பட்டுள்ளன.

இவ்வாறு இடப்பட்ட இறால் குஞ்சுகள் சில மாதங்கள் கடந்த பின்பு சுமார் 700கிராம் நிறையைக் கொண்டு வளர்ச்சியடையுமெனவும், காசல் ரீ நீர்தேக்கத்தின் அருகாமையில் உள்ள சுற்றுலா விடுதிகளில் இறால்களை விற்பனை செய்யமுடியுமெனவும் நன்னீர் மீன்வளர்ப்பு தினைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் எதிர்வரும் காலங்களில் தோட்டப்புறங்களில் உள்ள பாரிய குளங்களிலும் இந்த இறால் குஞ்சிகள் வளர்க்கும் வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளவிருப்பதாக நன்னீர் மீன் வளர்ப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Sat, 03/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை