வெனிசுவேலாவில் இருந்து அமெ. இராஜதந்திரிகள் வெளியேற்றம்

வெனிசுவேலாவில் நிலவும் மோசமான சூழல் காரணமாக அந்நாட்டில் உள்ள அமெரிக்க இராஜதந்திர பணியாளர்கள் அனைவரையும் இந்த வாரம் திரும்ப அழைத்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வெனிசுவேலாவில் அரசியல் பதற்றம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதோடு மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது.

அண்மைய அரசியல் பதற்றம் காரணமாக அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையிலான முறுகல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஜனவரி 23 ஆம் திகதி தன்னைத்தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட வெனிசுவேல எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவை வெளியிட்டு வருகிறார். இதனை அடுத்து அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளை வெனிசுவேலா துண்டித்தது.

Wed, 03/13/2019 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை