உலகில் மிக மகிழ்ச்சியான நாடாக மீண்டும் பின்லாந்து

உலகின் மகிழ்ச்சியான நாடாகத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பின்லாந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக மகிழ்ச்சித் தரநிலை தொடர்பான மிக அண்மைய அறிக்கை இதனைத் தெரிவித்தது. 156 நாடுகள் இதில் பட்டியலிடப்பட்டன.

நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகியவை பட்டியலின் முதல் 10 இடங்களில் உள்ளன. இருப்பினும், அண்மைய ஆண்டுகளில் உலகின் மகிழ்ச்சிக் குறியீடு குறைந்துவருவதாக அறிக்கை குறிப்பிட்டது.

மக்களிடையே எதிர்மறையான உணர்வுகள், கவலை, கோபம் போன்றவை அதிகரித்து வருவதாக அறிக்கை தெரிவித்தது. குறிப்பாக ஆசியர்கள், ஆபிரிக்கர்களிடையே அண்மைக்காலமாய் அது அதிகம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

Fri, 03/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை