வரட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபட வேண்டுகோள்

வரட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபட வேண்டுகோள்-ACJU Drought Media Release

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் உலமா சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு வரட்சியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களும், ஏனைய ஜீவராசிகளும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படும் நிலை தேன்றியுள்ளது. இது போன்ற சந்தர்பங்களில் நாம் அல்லாஹ்விடம் மன்றாடி அவனுடைய அருளைக் கேட்க வேண்டும். எமது பாவங்களை மன்னித்து அருள் புரியும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.

அசாதாரண நிலைமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள் பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபி வழியாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.

தண்ணீர் நமக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வரட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.

Thu, 03/21/2019 - 18:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை