மாணவர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம்

மாணவர்களுக்கு டெப் வழங்குவதை விட முன்னுரிமை வழங்க வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர எம்.பி தெரிவித்தார்.

கல்வி,உயர் கல்வி அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கல்வி தொடர்பில் தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படவில்லை. அமைச்சர்களும் அரசுகளும் மாறினாலும் மாறாத கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டும்.

நவீன தொழில் நுட்ப வளர்ச்சியுடன் இணைந்ததாக மாணவர்களுக்கு டெப் வழங்குவது சிறந்தது.ஆனால் நல்லாட்சியில் நாம் இருந்த ​போத இந்தத் திட்டத்தை சற்று தாமதப்படுத்தினோம். ஏனென்றால் கதிரைகள், மேசைகள், கட்டிடங்கள் இல்லாத பாடசாலைகள் இன்னும் இருக்கின்றன. அவற்றுக்கு தான் முன்னுரிமை வேண்டும்.

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புகளை தடை செய்ய வேண்டும்.ஆசிரியர்களுக்கு மாணவர்களை தண்டிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தண்டித்த ஆசிரியர் ஒருவருக்கு இருவருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஒரு போதும் ஆசிரியர்கள் குரோதத்துடனும் கோபத்துடனும் மாணவர்களை தண்டிப்பது கிடையாது. வேண்டுமென்று அவர்களை மாணவர்களை அடிப்பதில்லை.ஒழுக்கம் இன்றி பாடசாலைகளை முன்னேற்ற முடியாது.

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்

Sat, 03/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை