ஆளில்லா விமான தாக்குதல்: ஒபாமா கொள்கை வாபஸ்

போர் வலயத்திற்கு அப்பால் ஆளில்லா வான் தாக்குதலில் கொல்லப்படும் பொது மக்களின் எண்ணிக்கையை வெளியிட அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரிகளுக்கு கோரும் பராக் ஒபாமா காலத்து கொள்கையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திரும்பப் பெற்றுள்ளார்.

ஆளில்லா விமான தாக்குதல் தொடர்பில் வெளிப்படை தன்மையை கோரி அழுத்தங்கள் அதிகரித்ததை அடுத்தே 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். எனினும் இந்த உத்தரவு தேவையற்றது மற்றும் கவனச்சிதறலை ஏற்படுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாத இலக்குகள் மீதான அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல்கள் அதிகரித்தன.

பராக் ஒபாமாவின் எட்டு ஆண்டு பதவிக் காலத்தில் இடம்பெற்ற 1,878 ஆளில்லா விமானத் தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் டிரம்பின் முதல் இரண்டு ஆண்டு பதவிக் காலத்தில் 2,243 தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக புலனாய்வு பத்திரிகையியல் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை