லைபீரிய முன்னாள் ஜனாதிபதி மகன் மீது குற்றச்சாட்டு பதிவு

பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான உள்நாட்டு நாணயங்களை சட்டவிரோதமாக அச்சிட்டு பொருளாதாராத்தை சீர்குலையச் செய்தது தொடர்பில் லைபீரிய முன்னாள் ஜனாதிபதி எல்லென் ஜோன்சன் சிர்லிப்பின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

லைபீரிய மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக இருந்த 2016–18 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் இவ்வாறு நாணயங்களை அச்சிட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

நான்கு முன்னாள் வங்கி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு சுமாத்தப்பட்டிருப்பதோடு அதில் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

பல மில்லியன்கள் காணாமல்போனது தொடர்பான அறிக்கை கடந்த வாரம் வெளியானது. கடந்த ஆண்டு அச்சிடப்பட்ட லைபீரிய நாணயங்களின் 100 மில்லியன் டொலர் பெறுமதிக்கு அதிகமான தொகை காணாமல்போனது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றான லைபீரியா கடும் ஊழலுக்கும் முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை