கிராம வைத்தியசாலைகளின் குறையை நிவர்த்திக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

மாகாண சபைகளின் நி்ர்வாகத்தில் இயங்கும் கிராமிய வைத்தியசாலைகளில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பிரதியமைச்சர் அனோமா கமகே நேற்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (27) இடம்பெற்ற சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண வைத்தியசாலைகளில் டொக்டர்கள், தாதியர் மற்றும் அம்பியுலன்ஸ் வண்டிகளுக்கு பல்வேறு குறைபாடுகள் நிலவுவதானால் வறுமை நிலையிலுள்ள மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.

Thu, 03/28/2019 - 13:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை