கிழக்கு கரையோரச் சமரில் விபுலாநந்தா அபார வெற்றி

காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரிக்கும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலைக்கும் நேற்றுமுன்தினம் (12) காரைதீவில் இடம்பெற்ற 'கிழக்கு கரையோரச்சமரில்' 46 ஓட்டங்களால் காரைதீவு விபுலாநந்தா அணி வெற்றிவாகைசூடியது.

டெலிகொம் நிறுவனத்தின் அனுசரணையோடு இடம்பெற்ற இம்மாபெரும் கன்னிப்போட்டி(Maiden Big Match) காரைதீவு விபுலாநந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய விபுலாநந்தா அணி 28.5ஓவரில் 137ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சோபிதாஸ் 10 பவுண்டரிகள் அடங்கலாக 49ஓட்டங்களைப்பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை உவெஸ்லி அணியினர் 24 ஓவர்களில் சகல

விக்கட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

சிறந்த பந்துவீச்சாளராக விபுலாநந்தா அணியின் விதுசன் தெரிவானார்.

சிறந்த துடுப்பாட்ட வீரராக விபுலாநந்தா அணியின் சோபிதாஸ் தெரிவானார்.அவருக்கான வெற்றிக்கிண்ணத்தை டெலிகொம் நிறுவனத்தின் கல்முனைப் பிராந்திய முகாமையாளர் பிரான்சிஸ் நியுட்டன் நிசாந்த் வழங்கி வைத்தார்.

போட்டியின் சிறந்த வீரராக விபுலாநந்தா அணியின் சிறிஸ் தெரிவானார்.அவருக்கான வெற்றிக்கிண்ணத்தை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் வழங்கி வைத்தார்.

இறுதியில் முதலாவது சமரில் முதல்வெற்றியைப்பெற்ற காரைதீவு விபுலாநந்தா

அணி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

ரெலிகொம் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் ,சந்தைப்படுத்தல் பிரதிப்பொதுமுகாமையாளர் பொறியியலாளர் அனுருத்த சூரியாராய்ச்சி, பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் நியுட்டன் நிசாந்த், சந்தைப்படுத்தல் பொறியிலாளர் டி.எஸ்.பி.மாபா , காரைதீவு பிரதேசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், பழையமாணவர் சங்கத் தலைவர் வி.விஜயசாந்தன் உள்ளிட்டோர் வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தனர்.

காரைதீவு குறூப் நிருபர்

Thu, 03/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை