மூன்று தசாப்த பதவிக்கு பின் கஸக் தலைவர் இராஜினாமா

சோவியட் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்த பின் 1990களின் ஆரம்பம் தொடக்கம் ஒரே தலைவராக கஸகஸ்தானில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி நூர்சுல்தான் நஸர்பெயவ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த முடிவு கடினமாக இருந்தபோதும் புதிய தலைமுறை தலைவர்களுக்கு தாம் உதவ விரும்புவதாக தனது தொலைக்காட்சி உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் வளம் கொண்ட கஸகஸ்தானில் 1989 தொடக்கம் மாற்றப்படாத தலைவராக 78 வயது நஸர்பெயவ் இருந்து வந்தார். எனினும் அவர் தொடர்ந்தும் ஆளும் கட்சியின் செல்வாக்கு மிக்கவராக செயற்படவுள்ளார்.

நஸர்பெயவ் செல்வாக்கு மிக்க பாதுகாப்பு கெளன்சிலின் தலைவராக தொடர்ந்து செயற்படவுள்ளார். இதன்படி இராஜதந்திரியாக இருந்த 65 வயது காசிம் ஜெமார்ட் டொகாயேவ் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.

நஸர்பெயவ் தனது பதவிக் காலத்தில் பொருளாதார சீர்திருத்தத்தில் அதிக அவதானம் செலுத்தியதோடு ஜனநாயக அரசியல் அமைப்புகளை ஒடுக்குவதிலும் ஈடுபட்டார்.

Thu, 03/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை