பெண்கள் மாத்திரமான விண்வெளி உலா ரத்து

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா வரும் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விண்வெளி உலா இடம்பெறாது எனத் தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து முதல் முறையாக விண்வெளி வீராங்கனைகள் இருவர் விண்வெளியில் நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

அவர்களில் ஒருவரான ஆன் மக்லேய்ன் விண்வெளி நடைக்காகத் தமக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஆடையின் அளவு பொருந்தவில்லை என்பதை அண்மையில் கண்டுபிடித்தார். அவருடன் செல்லவிருந்த கிரிஸ்டினா குக்கின் அளவே தமக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார்.

ஆனால், வெள்ளிக்கிழமைக்குள் அதே அளவில் இரண்டாவது உடையை ஏற்பாடு செய்யமுடியாது என்பதால் குக்குடன் ஆனுக்குப் பதிலாக விண்வெளி வீரர் நிக் ஹேக் விண்வெளியில் நடக்கவுள்ளார்.

விண்வெளி வீரர்களுக்கான ஆடையின் சரியான அளவைத் தீர்மானிப்பது கடினம் என்று நாசா கூறியது. விண்வெளியில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால் அவர்களது உடலில் மாற்றங்கள் ஏற்படும் என்பதை அது சுட்டிக்காட்டியது.

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை