இத்தாலியில் சிறுவர்களுடன் கடத்தப்பட்டு தீயிடப்பட்ட பஸ்

இத்தாலியின் மிலான் நகருக்கு அருகில் 51 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி ஒன்று அதன் ஓட்டுநரால் கட்டத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

சில குழந்தைகள் இருக்கையுடன் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் பஸ் வண்டியின் பின்புற ஜன்னல் உடைக்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். எவருக்கும் மோசமான காயம் ஏற்படவில்லை. 14 பேர் புகை காரணமாக மூச்சுவிட சிரமங்களை சந்தித்துள்ளனர்.

செனகலைப் பூர்வீகமாகக் கொண்ட 47 இத்தாலி பிரஜையான ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“குழந்தைகள் அனைவரும் உயிர் தப்பியது ஒரு அதிசயம். இது ஒரு படுகொலையாக ஆகியிருக்கக்கூடும்” என்று மிலான் தலைமை வழக்கறிஞர் பிரான்சுஸ்கோ கிரேகோ கூறியதாக மேற்கோள் காட்டப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இத்தாலியின் குடியேறிகள் தொடர்பான கொள்கை மற்றும் மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழும் குடியேறிகள் மரணம் தொடர்பாக தனது சினத்தை வெளிப்படுத்தியதாக அந்த பஸ்ஸில் பயணித்த ஒரு ஆசிரியர் கூறியுள்ளார்.

Fri, 03/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை