மக்கள் பிரதிநிதிகளின் செலவுகளால் நாட்டு மக்களுக்கே சுமை

மக்கள் பிரதிநிதிகளுக்கான ஊதியங்கள், செலவுகள், சலுகைகள் அனைத்தும் நாட்டு மக்கள் மீதே சுமையாக்கப்பட்டிருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான  டக்ளஸ் தேவானந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான செலவுத்தலைப்புக்கள்  மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை இந்த மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக என்ன செய்துள்ளார்கள் என்பது பெரும் கேள்விக்குள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது-,

பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள், மாகாண சபைகளில் 455 உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளில் 7654 உறுப்பினர்கள்  என மொத்தமாக 8314மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது, சுமார் 2452 மக்களுக்கு ஒரு மக்கள் பிரதிநிதி இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த மக்கள் பிரதிநிதிகளுக்குரிய ஊதியங்கள், வீட்டு வசதிகள், வாகனங்கள், வாகனச் செலவுகள், ஏனைய சலுகைகள் யாவும் வசதிகளும் இந்த நாட்டு மக்களின் மீதே பெரும் சுமையாகச் சுமத்தப்பட்டு வருகின்றன.

(லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்)

Thu, 03/14/2019 - 08:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை