ரொஹிங்கியர்களை தனித்தீவுக்கு அனுப்புவது குறித்து பரிசீலனை

பங்களாதேஷில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான ரொஹிங்கிய அகதிகளைத் தனியொரு தீவுக்கு அனுப்பி வைப்பதில் எவ்வாறு உதவலாம் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஆராய்ந்து வருகிறது.

பஷான் சார் என்று அழைக்கப்படும் அந்தத் தீவு வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. பங்களாதேஷிலிருந்து படகு மூலம் ஒரு மணிநேரத்தில் அந்தத் தீவைச் சென்றடையலாம்.

2006ஆம் ஆண்டு கடலிலிருந்து மேலெழுந்த அந்தத் தீவில் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்கு 100,000 அகதிகளை அனுப்புவதற்குப் பங்களாதேஷ் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் தென் எல்லைப் பகுதிகளில் நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில் அவர்களை இடமாற்றம் செய்யும் பங்களாதேஷின் முடிவு புதிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பங்களாதேஷின் கரையோரப் பகுதியை ஆண்டுதோறும் தாக்கும் பருவமழையை பஷான் சார் தீவால் எதிர்கொள்ள முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அகதிகள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே அடுத்த மாதத்திலிருந்து அவர்கள் தீவுக்கு மாற்றிவிடப்படுவர் என்று பங்களாதேஷ் கூறியது.

Thu, 03/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை