எஸ்தோனியாவில் முதல் பெண் பிரதமர் தேர்வு

எஸ்தோனிய பொதுத் தேர்தலில் ஆளும் மைய கூட்டணியை தோற்கடித்து மைய வலதுசாரி சீர்திருத்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் காஜா கல்லஸ் தலைமையிலான சீர்திருத்த கட்சி 29 வீத வாக்குகளை வென்றதோடு மைய கூட்டணி 23 வீத வாக்குகளை வென்றுள்ளது.

இதன்மூலம் கல்லஸ் எஸ்தோனியாவின் முதலாவது பெண் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார். கூட்்டணி அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் திறந்தே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1991 ஆம் ஆண்டு சோவியட் ஒன்றியத்தில் இருந்து சுதந்திரம் பெற்றது தொடக்கம் சீர்திருத்த மற்றும் மையவாத கட்சிகளே ஆட்சியில் இருந்து வருகின்றன.

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை