எதிரணியால் விமர்சிக்க முடியவில்லை

நாட்டின் சவாலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாலேயே எதிர்க்கட்சியினரால் அதனை விமர்சிக்க முடியாதிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கடந்த வருட இறுதிப் பகுதியில் 52 நாட்கள் அரசியல் ரீதியான குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு நாட்டின் நிதி நிலைமை மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலை என்ன என்பது புரிந்திருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். வரவுசெலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மிகவும் குறைவான சமூக வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் கிராம மட்டத்திலான வறுமையை இல்லாமல் செய்வதற்கு முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தவேண்டிய கூடுதல் பொறுப்பு நிதியமைச்சுக்கு உள்ளது. குறிப்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தளவு பங்களிப்பை செலுத்திவரும் மாகாணங்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அது மாத்திரமன்றி ஏற்கனவே நடைமுறையில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டமான சமர்த்தி அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகளைத் தெரிவுசெய்வதில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இதனை பலமான முறையில் முன்னெடுப்பதற்கும் நிதியமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேல்மாகாணம் எதிர்கொள்ளும் நீர் விநியோகப் பிரச்சினைக்கு உயர் நீர்த்தேக்கப் பகுதிகளில் புதிதான நீர்த்தேக்கங்களை அமைப்பதற்கான யோசனைகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்தன. அவை ​ெதாடர்பிலும் வரவுசெலவுத்திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், உயர்கல்வித் துறையின் அபிவிருத்திக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாகப் பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் வளங்களை அதிகரிப்பதற்காக 26 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 03/13/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக