பூமியின் வளிமண்டலத்தில் பெரும் விண்கல் வெடிப்பு

புவியின் வளிமண்டலத்தில் ஒரு பெரும் தீப்பந்து வெடித்து சிதறியதாக நாசா கூறியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் இதுமாதிரி வெடித்து சிதறிய இரண்டாவது பெரும் தீப்பந்து இதுதான். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், ரஷ்யாவில் உள்ள செல்யபின்ஸ்க் நகரத்தின் மீது இதுபோன்று பெரியதொரு தீப்பந்து வெடித்தது.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் பெரிங் கடலின் மீது அது வெடித்து சிதறியதால், இந்நிகழ்வு பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஹிரோஷிமா வெடிகுண்டு தாக்குதலின் போது வெளியான ஆற்றலைவிட, 10 மடங்கு அதிகமான ஆற்றல் இந்த விண்கல் வெடித்தபோது வெளியானது.

ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் இவ்வளவு பெரிய தீப்பந்து வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாசாவின் லின்ட்லி ஜோன்சன் தெரிவித்தார். கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி உள்ளுர் நேரப்படி மதியவேளையில் வினாடிக்கு 32 கிலோமீற்றர் வேகத்தில் இந்த விண்கள் வளிமண்டலத்திற்குள் நுழைந்துள்ளது. பல மீற்றர் அளவுகொண்ட இந்த விண்கல் பூமியின் மேற்பரப்பில் இருந்து 25.6 கிலோமீற்றர் மேலால் வெடித்துள்ளது.

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை