இடாய் சூறாவளி: மொஸம்பிக்கில் உயிரிழப்பு வேகமாக அதிகரிப்பு

ஆபிரிக்காவின் தென்பகுதியில் வீசிய இடாய் சூறாவளிக்குப் பலியானோர் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது. மொஸம்பிக், மாலாவி, சிம்பாப்வே ஆகிய நாடுகளை ஒரு வாரத்திற்கு முன் இடாய் சூறாவளி தாக்கியது. மொஸம்பிக்கில் மட்டும் 417 பேர் உயிரிழந்துள்ளனர். சிம்பாப்வேயில் 259 பேர் பலியாகினர்.

சூறாவளியைத் தொடர்ந்து பெய்த கனத்த மழையால் சில ஆறுகள் நிரம்பி வழிவதாகவும் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இடாய் சூறாவளியால் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் வெள்ள நீர் முழுமையாக நீங்கிய பின்னரே உயிரிழந்தவர்களின் முழுமையான எண்ணிக்கை தெரியவரும என்று ஐ.நா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Mon, 03/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை