பட்.மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் போட்டி

மட்.பட்.மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி வித்தியாலய முதல்வர் திருமதி.தவமணிதேவி குணசேகரம் தலைமையில் மாங்காடு பொது விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். மேலும் இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் ந.நேசகஜேந்திரன், மண்முனை தென்எருவில்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன், கோட்டக்கல்வி அதிகரி த.அருள்ராசா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் த.ஜெயச்சந்திரன், மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

கிராம மக்களினதும் எனையவர்களினதும் ஒத்துழைப்புக்களுடன் இப்பாசாலையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்வை பார்க்கின்றபோது அகமகிழ்கின்நேன். இதுபோல் இப்பாடசாலை மாவட்ட மட்டம், மாகாண மட்டம், தோசியமட்டத்திலும் பல சாதனைகளைப் புரியவேண்டும் என இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடையே நெய்தல், முல்லை, மருதம் ஆகிய பெயர்களில் மூன்று இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

இதில் நெய்தல் இல்லம் 492 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடம்தையும், முல்லை இல்லம் 473 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், மருதம் இல்லம் 471 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைபும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை