பிரதமர் ரணிலுக்கு இன்று பிறந்தநாள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70ஆவது பிறந்த தினம் (24) இன்றாகும். 1977 ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இளம் வயதில் பாராளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஐந்து தடவைகள் பிரதமர் பதவி வகித்து முத்திரை பதித்துள்ளார். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்று, பின்னடைவு கண்டிருந்த கட்சியை பலப்படுத்திக் குறுகிய காலத்தில் பலம் பொருந்திய அரசியல் கட்சியாக மாற்றுவதில் ரணில் விக்கிரமசிங்க பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார். 

இன்றைய பிறந்த தினத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9 மணிக்கு அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் சில்வர் பார்க் பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நடும் வைபவத்தில் கலந்து கொள்கின்றார்.  

அதனையடுத்து மிரிஜ்ஜவில சீமெந்து உற்பத்திச்சாலைக்கான அடிக்கல்லை நடவுள்ளார். 

பிற்பகல் 4 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறும் கால்களை இழந்த வறுமைக்கோட்டில் வாழும் சிறுவர்களுக்கு செயற்கை கால்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வார். 

(எம்.ஏ.எம். நிலாம்)     

Sun, 03/24/2019 - 08:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை