சர்வதேச கராத்தே பயிற்சி முகாம்

ஜப்பான் நாட்டைச்சேர்ந்தவரும் ஜப்பான் கராத்தே சங்கத்தின் தொழில்நுட்ப இயக்குனருமான சிகான் சுசுகே ஒட்டானி இலங்கை ராம் கராத்தே அங்கத்தவர்களுக்கான விசேட பயிற்சியை அளித்தார்.

ஜப்பான் கராத்தே சங்கத்தின் இலங்கைக்கான தலைவரும் பிரதம போதனாசிரியருமான டி.எல்.லலித்தின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த அவர் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மகாவித்தியாலய மண்டபத்திலும் தர்மசங்கரி மைதான உள்ளக விளையாட்டரங்கிலும் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பயிற்சியை வழங்கினார்.

கடந்த மாதம் இலங்கை வந்த அவர் இந்தியா காத்மண்டுவில் நடைபெறவுள்ள தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை கராத்தே சம்மேளன அங்கத்தவர்களுக்கான பயிற்சியை வழங்கினார்.

தொடர்ந்து மட்டக்களப்பில் சென்சி க.குமாரராஜா, சென்சி க.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

நிறைவாக ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதானாசிரியர் சிகான் கே.ஹேந்திரமூர்த்தி தலைமையில் சங்கத்தின் சிரேஷ்ட போதானாசிரியர்களின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்டு 250 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே தொழில்நுட்பங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தினை வழங்கினார்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Fri, 03/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை