ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர்: தீங்கான விடயங்களுக்கு இலங்கை எதிர்ப்பு

ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் இலங்கைக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கலப்பு நீதிமன்றம் அமைத்தல் போன்ற தீர்மானங்களுக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கூறினார். ஐ. தே. க. வின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் தீர்மானங்களுக்கு மட்டுமே இலங்கை இணக்கம் தெரிவிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

ஐ. நா. வின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் எவரும் எந்தவொரு நல்ல விடயத்தையோ அல்லது கெட்ட விடயத்தையோ முன் வைக்கலாம். ஆனால் அனைத்து மக்களினதும் பேரில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்காத தீர்மானங்களுக்கு மட்டுமே நாம் இணக்கம் தெரிவிப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் இராணுவத்தினர் மீது சுத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.

யுத்த ஹீரோக்கள் மற்றும் புத்திக் கூர்மையுடன் இயங்கிய படைப்பிரிவினர் சார்பாக இந்த அரசாங்கம் அவர்கள் பின்னால் இருந்து செயற்படும். அவர்கள் இந்த நாட்டுக்காக யுத்தம் செய்தவர்கள். அதே போன்று இராணுவ தளபதிகள் சரியான விடயங்களை செய்திருந்தால் அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. அவர்கள் தேவையற்ற தண்டனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. எவ்வாறெனினும் குற்றச் செயல்கள் மற்றும் அக்காலகட்டத்தின் யுத்தத்தின் போர்வையில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நாட்டின் சட்டங்கள் பிரயோகிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விடயத்தில் அரசியல் இலாபம் பெற சில ஊடகங்களும் அரசியல்வாதிகளும் முயற்சி செய்கின்றனர் என்பதை நாம் காண முடிகிறது. 2015க்கு முன்னர் கிடைத்ததைவிட பாரிய வெற்றியை நாம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இப்போது பெற்றுள்ளோம். எமது நாட்டின் ஒருமைப்பாட்டையும் சுதந்திரத்தையும் பாதிக்காமல் இருக்கும் வகையில் நாம் அனைத்தையும் செய்கின்றோம். அதேநேரம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

 

Fri, 03/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை