'தரக்குறைவான பஸ் வண்டிகளின் இறக்குமதி நிறுத்தப்படும்'

தரக்குறைவான பஸ் வண்டிகளை இறக்குமதி செய்வதை தடை செய்யப் போவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.  

அஸ்கிரிய பீட மகாநாயக்கத் தேரர் வண. வரகாகொட ஞானரத்ன தேரரை 15ஆம் திகதி சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கூறியதாவது, தரம் குறைவான பஸ் வண்டிகள் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அமைச்சரவையை வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

குருநாகல், ஹபரணை புகையிரத சேவை தொடர்பாக காணிகளைக் கையேற்பதில் அஸ்கிரிய விகாரைக்குச் சொந்தமான காணிகள் அதிகம் இருப்பதால் அது பற்றிக் கலந்துரையாடுவதற்கே அவர் சமுகமளித்திருந்தார். 

தனியார் துறையை விட இ.போ.சவில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் இரு துறையையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.  இ.போ.ச. விற்கு வருடம் 500புதிய பஸ்கள் தேவைப்படுவதாகவும் முதற்கட்டமாக 2000பஸ் வண்டிகளையாவது இறக்குமதி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். 

மெட்றோ ரயில் சேவை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், கொழும்பிலுள்ள வாகன நெரிசல்களை குறைக்க மாலம்பே முதல் கொழும்பு வரை அதனை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். 

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது இந்தியாவிற்குப் பெற்றுக் கொடுக்கப்படமாட்டாது என்றும் கூறினார். தென்னிந்தியா மற்றும் மாலைதீவுக்கான இலகுவான சேவையை இதனூடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.   

(எம்.ஏ.அமீனுல்லா,அக்குறணை குறூப் நிருபர்) 

Wed, 03/20/2019 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை