கிண்ணியா அலிகார் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் அறபா இல்லம் சம்பியன்

கிண்ணியா அலிகார் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் 296 புள்ளிகளைப் பெற்று, அறபா இல்லம் 2019 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இல்லங்களுக்கிடையிலான இறுதிப் போட்டிகள் (12) கல்லூரி அதிபர் கே.எம்.எம். ஹனிபா தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றன.

257 புள்ளிகளைப் பெற்ற மினா இல்லம் 2ஆம் இடத்தையும் 226 புள்ளிகளைப் பெற்ற சபா இல்லம் 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

கரப்பந்து, கிரிக்கெட் மற்றும் எல்லே ஆகிய போட்டிகளில் அறபா இல்லம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. உதைபந்தாட்டப் போட்டியில் மினா இல்லம் சம்பியனானது..

இல்ல அலங்காரப் போட்டியில் அறபா இல்லம் 1 ஆம் இடத்தையும் மினா இல்லம் 2 ஆம் இடத்தையும் 3 ஆம் இடத்தை சபா இல்லமும் பெற்றுக் கொண்டன. அணி நடைப் போட்டியில் அறபா இல்லம் 1 ஆம் இடத்தையும் மினா இல்லம் 2 ஆம் இடத்தையும் சபா இல்லம் 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. 10 வயது பிரிவுக்கான சம்பியனாக அறபா இல்லத்தைச் சேர்ந்த இத்ரீஸ் கபீழும் 12 வயதுப் பிரிவுக்கான சம்பியனாக மினா இல்லத்தைச் சேர்ந்த அன்சார் ஆஸிக்கும் 16 வயது பிரிவுக்கான சம்பியனாக அறபா இல்லத்தைச் சேர்ந்த றாஹிமீன் இம்ரானும் 18 வயதுப் பிரிபுக்கான சம்பியனாக மினா இல்லத்தைச் சேர்ந்த முஜீப் முஜாஹிதும் 20 வயதுப் பிரிவுச் சம்பியனாக அறபா இல்லத்தைச் சேர்ந்த பளீல் கபூர் முனீப்பும் செய்யப்பட்டனர். இந்த விழாவில் துறைமுகங்கள், கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மகரூப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கிண்ணியா மத்திய நிருபர்

Thu, 03/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை