துறைமுக அதிகார சபையில் ஓய்வுபெறும் ஊழியர்கள் கௌரவிப்பு

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு அளப்பரிய சேவையாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு தங்க நாணயம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மஹாபொல துறைமுக மற்றும் கடல்சார் கல்லூரியில்  நேற்று (14) நடைபெற்றது.

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில்  தங்க நாணயங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 01.01.2017ஆம் ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஓய்வுப்பெற்ற 140ஊழியர்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டது.

 இந்நிகழ்வில் உரையாற்றிய துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க குறிப்பிட்டதாவது,

இலங்கை துறைமுக அதிகார சபை போன்ற ஒரு நிறுவனத்தின் அபிவிருத்தியின் பொருட்டு அர்பணிப்புடன் செயற்பட்ட ஊழியர்களுக்கு தங்க நாணயங்களை வழங்குவதை முன்னிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அர்பணிப்புடன் சேவையாற்றும் ஊழியர்களுக்கு அதற்குரிய சன்மானம் வழங்கப்பட வேண்டும். மேலும் ஊழியர்களால் இந்நாட்டிற்கு ஆற்றப்பட வேண்டிய சேவைகள் தொடர்பிலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் தற்பொழுது துறைமுகத்தின் செயற்பாடுகள் உயரிய மட்டத்தை அடைந்துள்ளமையால் எதிர்காலத்தில் கிழக்கு முனையம் தொடர்பாக சிறந்த நிலைப்பாடொன்றை மேற்கொள்ளும் பொருட்டு துரித நடவடிக்கைளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்னாயக்க , கடந்த காலங்களில் இலங்கை துறைமுக அதிகார சபை சர்வதேச சமுத்திரவியல் துறையில் பல வெற்றிகளை ஈட்டிக்கொண்டுள்ளது. சமுத்திரவியல் வலயத்தில் போட்டி தன்மையுடைய துறைமுகங்களுள் அதிகூடிய வளர்ச்சி வீதத்தை கொண்ட துறைமுகமாக கொழும்பு துறைமுகம் காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் 7மில்லியன்களுக்கு மேற்பட்ட கொள்கலன்களை கையாண்டமையானது இவ்வூழியர்கள் ஈட்டிக்கொண்ட மாபெரும் வெற்றியாகும்.

தம்முடைய வேலைத்தளமான இலங்கை துறைமுக அதிகார சபையின் பொருட்டு அளப்பரிய சேவையாற்றிய ஊழியர்களுக்கு தங்க நாணயங்களை வழங்குவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். துறைமுக அபிவிருத்தியின் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

Fri, 03/15/2019 - 09:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை