அல் அக்ஸாவின் பலஸ்தீன அதிகாரிகளுக்கு தடை நீடிப்பு

ஜெரூசலம் அல் அக்ஸா வளாகத்தின் மேற்பார்வைக்கு பொறுப்பான பலஸ்தீன உயர் அதிகாரிகள் அந்த பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைவதற்கான தடையை இஸ்ரேல் பொலிஸ் நீடித்துள்ளது.

அல் அக்ஸா வளாகத்தில் உள்ள பாப் அல் ரஹ்மான் கட்டிடத்தில் இஸ்ரேலின் 16 ஆண்டு தடையை மீறி முஸ்லிம்கள் தொழுவதற்கு அல் அக்ஸா வளாகத்திற்கு பொறுப்பான இஸ்லாமிய அறக்கட்டளை அனுமதி அளித்த சம்பவத்திற்கு சில வாரங்களின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சபையின் முடிவை அடுத்து கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி அதன் தலைவர் ஷெய்க் அப்தல் அஸீம் சல்ஹாப் மற்றும் பிரதித் தலைவர் ஷெய்க் நஜெஹ் பகரத் சிறுது நேரம் தடுத்து வைக்கப்பட்டதோடு பள்ளிவாசல் வளாகத்திற்குள் செய்ய ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சல்ஹாப் மீதான தடையை 40 நாட்களுக்கும் பகரத் மீதான தடையை நான்கு மாதங்களுக்கும் இஸ்ரேல் பொலிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீடித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பால் பயன்படுத்துவதாக கூறி இஸ்ரேல் 2003 ஆம் ஆண்டு பாப் அல் ரஹ்மான் பகுதியை மூடியது.

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை