வடக்கு கிழக்கிலும் வர்த்தக வலயங்கள் அமைக்கப்படும்

பிரதமர் ரணில்

பிங்கிரிய வர்த்தக வலயத்தின் பின்னர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் வர்த்தக வலயங்களை அமைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஒக்டோபர் 26ம் திகதி வீட்டிற்குச் சென்றிருந்தால் நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களும் மக்களுக்கு கிடைத்திருக்காது.

6 ஆவது பராக்கிரமபாகு அரசனுக்குப் பின்னர் அரிசியில் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்த என்னை விவசாயத்தை விரும்பாதவர் எனக் கூறுவது அடிப்படை அற்றது. டீ. எஸ். சேனாநாயக்க, ஜே. ஆர். ஜயவர்தன காலத்திலேயே அந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இலங்கையில் மிகப்பெரிய கைத்தொழில் நகரமாக உருவாக்கப்படும் பிங்கிரிய கைத்தொழில் நகரை அமைக்கும் ஆரம்ப நிகழ்வின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

600 ஏக்கரில் அமைக்கப்படும் பிங்கிரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயம் தற்போது நாட்டில் அமைக்கப்படும் பாரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயமாகக் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் 4000 ஏக்கர் முதலீட்டு அபிவிருத்தி வலயமாக திருகோணமலையிலும் 5000 ஏக்கரில் ஹம்பாந்தொட்டையிலும் 10000 ஏக்கரில் மொனராகலையிலும் முதலீட்டு அபிவிருத்தி வலயங்களை அமைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் பெற்ற கடனை தற்போதைய அரசாங்கமே செலுத்த வேண்டியுள்ளது. அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிரமங்கள் தொடர்பாக கவலை கொள்வதாகவும் கடன் சுமையிலிருந்து மீள நாட்டு மக்கள் அனைவரும் செய்யும் அர்ப்பணிப்புக்காக நன்றி கூறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான கபீர் ஹாஷிம், அகில விராஜ் காரியவசம், காமினி ஜயவிக்ரம பெரேரா, ரஞ்சித் மத்துமபண்டார, ஜே. சீ. அலவதுவல, நளீன் பண்டார ஆகியோருடன் பெருமளவான அரச அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை