மைலோ வர்ண விருது விழா ஏப்ரலில்

பாடசாலை அரங்கில் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளைப் பெற்றுக்கெண்ட வீரர்களை கௌரவிக்கும் அகில இலங்கை பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழா, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் அகில இலங்கை பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழா நடைபெறவில்லை. இதன்காரணமாக இவ்வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருது வழங்கும் விழாவில் அதிகளவான வீரர்கள் பல்வேறு விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இம்முறை நடைபெறவுள்ள அகில இலங்கை பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழாவை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக 2016ஆம் ஆண்டுக்கான வர்ண விருதுகள் 4ஆம் திகதி காலை 8.30 ஆரம்பமாகவுள்ளன. இதில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுளள் இரண்டாம் கட்டத்தில் 2017ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், இதில் பிரதம அதிதியாகக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இலங்கை பாடசாலைகள் விளையாட்டுத்துறையின் வளர்சிக்காக பாரிய சேவையினை வழங்கி வருகின்ற நெஸ்ட்லே லங்கா லிமிடெட் நிறுவனம் கடந்த காலங்களைப் போல இம்முறையும் 30 விளையாட்டுக்களை உள்ளடக்கியதாக வருடத்தின் அதி சிறந்த விளையாட்டு வீரர், அதி சிறந்த விளையாட்டு வீராங்கனை, வருடத்தின் வளர்ந்துவரும் வீரர் மற்றும் வளர்ந்துவரும் வீராங்கனை ஆகிய விருதுகளை வழங்கவுள்ளன.

இலங்கை பாடசாலைகள் விளையாட்டுத்துறைப் பிரிவின் மேற்பார்வையின் கீழ் நியமிக்கப்பட்ட நடுவர் குழாத்தினால் இந்த விருதுகளுக்காக வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளையும் சேர்ந்து அதி சிறந்த வீரர்கள் 10 பேரும், வளர்ந்துவரும் வீரர்கள் 13 பேரும் இம்முறை விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, 2016இல் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 519 பேருக்கும், 2017இல் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 497 பேருக்கும் வர்ண விருதுகளும், திறன்காண் சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்படவுள்ளன. கல்வி அமைச்சு, இலங்கை பாடசாலைகள் விளையாட்டுத்துறைப் பிரிவு என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மைலோ வர்ண விருது விழாவுக்கு நெஸ்லே லங்கா லிமிடெட் அனுசரணை வழங்குகின்றது. அத்துடன், இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழாவில் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் கூட்டாண்மை விடயங்களுக்கான உதவித் தலைவர் பந்துல எகொடகே மற்றும் மைலோ வியாபார முகாமையாளர் மொஹமட் அலி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

2016 விருது பெறுபவர்கள் விபரம்

வளர்ந்துவரும் வீரர் - அகலங்க பீரிஸ் (நீச்சல் - பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி), சந்தூஷ வீரசிங்க (மெய்வல்லுனர் - கொட்டாஞ்சேனை புனித பெனடிக் கல்லூரி), சசிந்து கருணாதிலக்க (பெட்மின்டண் - கொழும்பு நாலந்த கல்லூரி)

வளர்ந்துவரும் வீராங்கனை – சமத்சரா திவ்யாஞ்சலி (மேசைப்பந்து – கொழும்பு விசாகா கல்லூரி), ரமுது சமரகோன் (நீச்சல் - கொழும்பு விசாகா கல்லூரி), செய்னப் மொஹமட் சவ்மி (செஸ் - கண்டி உயர் மகளிர் பாடசாலை)

அதி சிறந்த வீரர் - சரித் அசலங்க (கிரிக்கெட் - காலி றிச்மண்ட் கல்லூரி), எல்.எஸ்.பி தனன்ஞய (மெய்வல்லுனர் - வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி), இமேஷ் உமயங்க (மேசைப்பந்து – கண்டி வித்யார்த்த கல்லூரி)

அதி சிறந்த வீராங்கனை – ஒமாயா உதயாங்கனி (மெய்வல்லுனர் - வெலிமட மத்திய மகா வித்தியாலயம்), முத்துமாலி பிரியதர்ஷனி (மேசைப்பந்து – அம்பலாங்கொட ஸ்ரீ தேவானந்த கல்லூரி)

2017 விருது பெறுபவர்கள் விபரம்

வளர்ந்துவரும் வீரர் -அகலங்க பீரிஸ் (நீச்சல் - பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி), எஸ். டீ காரியவசம் (மெய்வ்லுனர் - மருதானை புனித ஜோசப் கல்லூரி), ந்தூஷ் வீரசிங்க (மெய்வல்லுனர் - கொட்டாஞ்சேனை புனித பெனடிக் கல்லூரி)

வளர்ந்துவரும் வீராங்கனை - ஹசினி அம்பலங்கொடகே (பெட்மின்டன் - கொழும்பு விசாகா கல்லூரி), சயுனி ஜயவீர (செஸ் - அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயம்), அனீகா செனவிரத்ன (டென்னிஸ் - கொழும்பு பௌத்த மகளிர் கல்லூரி), காவிந்தியா சத்சரனி (மெய்வல்லுனர் - அபகமுவ மத்திய மகா வித்தியாலயம்)

அதி சிறந்த வீரர் - சிசிந்து கருணாதிலக்க (பெட்மின்டண் - கொழும்பு நாலந்த கல்லூரி), மினுல் தொலவீர (செஸ் - கொழும்பு றோயல் கல்லூரி)

அதி சிறந்த வீராங்கனை – சச்சினி தாருகாக திவ்யாஞ்சலி (மெய்வல்லுனர் - வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), வினோலி களுஆரச்சி (நீச்சல் - கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி)

பீ.எப் மொஹமட்

Sat, 03/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை