அ. மு. மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கட்டார் கிளை அங்குரார்ப்பணம்

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்க கட்டார் நாட்டு கிளை கடந்த 7ம் திகதி டோஹா கட்டாரில் உள்ள K108 ஹோட்டலில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. 

எம். ஆசிக் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்டாரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே கலந்துகொண்டார்.

இதன்போது கட்டார் கிளை உத்தியோகபூர்வமாக இயங்குவதற்குரிய அங்கீகார பத்திரத்தினை அவர் பழைய மாணவர்களிடம் கையளித்தார்.

இதனை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசியபாடசாலை) கட்டார் கிளையை உருவாக்க பாடசாலையால் நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பாளர்களான நஜீப் ஆதம்லெப்பை, எம். ஆசிக் அஹமட், ஏ.ஜி.அஹமத் றிசாத் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான எம்.எம்.இயாஸ், ஏ.ஜி. பதுர்சமான் ஆகியோர் தூதுவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.  

Wed, 03/13/2019 - 13:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை