இணை அனுசரணையில் எந்த மாற்றமும் இல்லை

*40ஆவது மனித உரிமைகள் பேரவை அமர்வு
*வெளிவிவகார அமைச்சு

அரசாங்கத்தின் அறிக்ைக  நாளை சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ​பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுளள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதில் எந்த மாற்றமும் கிடையாது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றிய அறிக்ைக நாளைய தினம் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு, பேரவை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஏ.நொரின் புள்ளே ஆகியோர் ஜெனீவா அமர்வில் இலங்கையின் சார்பில் பங்கேற்கின்றனர்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ​பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று வௌிவிவகார அமைச்சு வட்டாரம் தெரிவித்தது. அடுத்து வரும் இரண்டாண்டுகளில் பிரேரணையின் விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

எனினும், இணை அனுசரணை வழங்குவது நாட்டுக்குப் பாதிப்பாக அமையும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிக்ைகயொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.(வி)

நமது நிருபர்

Tue, 03/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை