ஐ.எஸ் குழுவுக்கு எதிரான ‘கடைசிப் போர்’ ஆரம்பம்

ஈராக் எல்லையை ஒட்டிய இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கடைசி சிறிய நிலப்பகுதியை கைப்பற்றும் அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயக படையின் கடைசிக்கட்டப் போர் ஆரம்பமாகியுள்ளது. 

யூப்ரடிஸ் நதிக்கரையில் உள்ள கிழக்கு சிரிய கிராமமான பாகூஸை கைப்பற்றுவது ஐ.எஸ் குழுவின் கலீபத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அமையவுள்ளது. எனினும் தொலைதூர மேற்குப் பகுதிகளில் எஞ்சியிருக்கு அந்தக் குழுவின் கெரில்லா போர் தந்திரங்கள் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது.  

எனினும் ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான போராளிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் ஐ.எஸ் கட்டுப்பாட்டுப் பகுதி கணிசமாக சுருங்கியுள்ளது.  

இந்நிலையில் அந்த பகுதியில் இருந்து கடைசி பொதுமக்களும் வெளியேற்றப்பட்ட பின் கடந்த வெள்ளிக்கிழமை சிரிய ஜனநாயகப் படை பாகூஸ் கிராமத்திற்குள் ஐ.எஸ் குழுவுடன் 18 மணி நேரம் தொடர்ச்சியாக சண்டையிட்டது.  

“ஐ.எஸ் கண்ணிவெடிகள் வைத்திருக்கும் பகுதிகள் ஊடாக எந்த பிரச்சினையும் ஏற்படுவதை தவிர்த்து எமது படை மெதுவாக முன்னேறி வருகிறது. சிறு பாதைகள் நெடுக ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன” என்று குர்திஷ்கள் தலைமையிலான சிரிய ஜனநாகப் படை குறிப்பிட்டுள்ளது.  

ஐ.எஸ்ஸின் வெளிநாட்டு போராளிகளே அந்த சிறு நிலத்தில் சண்டையிட்டு வருவதோடு பதுங்கு குழிகளை பயன்படுத்தி அமெரிக்க ஆதரவு படைகள் மீது எதிர்பாராத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  

கடந்த செப்டெம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை மூலம் ஐ.எஸ் ஊறுப்பினர்கள் யூப்ரடிஸ் நதியின் கிழக்கு கரையில் இருந்து ஈராக் எல்லையை ஒட்டிய அந்த கிராமத்தின் விளிம்பு வரை பின்வாங்கச் செய்யப்பட்டது.  

தற்போது அந்த கிராமத்தில் எஞ்சியிரும் ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியின் ஒருபக்கம் யூப்ரடிஸ் நதியாலும் மற்றப்பக்கம் ஈராக் எல்லையை ஒட்டிய பாலைவனப் பகுதியாலும் சூழப்பட்டுள்ளது. இதில் நதிக்கரையை ஒட்டி பல குடும்பங்களும் கூடாரங்களில் இருந்து வருகின்றனர்.      

Mon, 03/04/2019 - 14:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை