வத்தளை ஆடையகத்தில் தீ

கொழும்பு - நீர்கொழும்பு பிராதான வீதியில், வத்தளை ஹெந்தளை சந்தியில் உள்ள ஆடையகம் ஒன்றில் நேற்று (24) இரவு தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

குறித்த தீ விபத்து காரணமாக, கொழும்பு - நீர்கொழும்பு பிராதான வீதி ஒரு சில மணி நேரங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

நேற்று (24) இரவு 8.30மணியளவில் ASB Fashion எனும் ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட குறித்த தீயை, கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு, பொலிசார், கடற்படை வீரர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

குறித்த தீ விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனவும், தீயினால் ஏற்பட்ட சேத விபரம் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

Mon, 03/25/2019 - 08:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை