இலங்கை மீதான பிரேரணை: வலுவிழக்கச் செய்வதற்கு சர்வதேச சமூகம் உடன்பாடு

இலங்கைக்கு எதிரான பிரேரணையை வலுவிழக்கச் செய்வதற்கு சர்வதேச சமூகம் உடன்பட்டுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் எதிரணியிடம் கோரிக்கை விடுத்தார்.

ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டம் ஆரம்பமாகியுள்ளதோடு இலங்கைக்கு கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது தொடர்பில் இரகசிய தகவல்களை வெளியிட்டிருந்தார். ஜெனீவா பேரவையில் இலங்கை உடன்பட்டவை தற்போது செல்லுபடியில்லை எனவும் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து அந்நாடு நீங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு எத்தகைய நடவடிக்கை எடுக்கும் என தினேஷ் குணவர்தன எம்.பி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கிரியெல்ல, 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதாலேயே ஐ.நா. இலங்கை மீது விதிக்கவிருந்த தடைகளிலிருந்து மீண்டெழ முடிந்தது. மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரையில் அமர்த்துவதை தடுக்க முடிந்தது. 2012,2013,2014 ஆண்டுகளின் ஜெனீவா கூட்டத் தொடர்களின் இலங்கைக்கு எதிராக மூன்று யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2015 இலும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்திருந்தால் இலங்கைக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருக்கும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை