இடம்மாறி தரையிறங்கிய பிரிட்டிஷ் விமானம்

லண்டனிலிருந்து ஜெர்மனியின் டசல்டோர்ப் நகருக்குச் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் நகரில் தரை இறங்கியதால் பயணிகள் வியப்படைந்தனர். எடின்பர்க் நகருக்குப் பயணிகளை வரவேற்பதாக விமானி அறிவித்த வரையில் இவ்வாறு நடந்ததாகப் பயணிகள் எவருக்கும் தெரியவில்லை. விமானிக்குத் தவறான பயணப் பாதை கொடுக்கப்பட்டதால் இவ்வாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விமானம் எடின்பர்க்கில் தரையிறங்கிவிட்டதாக விமானி அறிவித்தபோது அவர் விளையாட்டுக்காக அவ்வாறு செய்திருந்தார் என்று பயணிகள் அனைவரும் ஆரம்பத்தில் நினைத்திருந்ததாக விமானத்தில் இருந்த 24 வயது சோபி குக் என்ற பெண் தெரிவித்தார். நடந்த சம்பவத்திற்கு விமான சேவை மன்னிப்புக் கோட்டதோடு இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பாதிக்கப்பட்ட பயணிகளைத் தற்போது ஜெர்மனிக்கு கொண்டுசேர்த்துவிட்டதாக விமான சேவை கூறியது.

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை