கசிப்பு உற்பத்தியில் ஈடுபாடு; பொலிஸாரால் பெண் கைது

கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை மத்திய நிலையமொன்றினை, ஹப்புத்தளை பொலிஸார் நேற்றுமுன்தினம் முற்றுகையிட்டுள்ளனர். மேலும் அந்நிலையத்தினை நடத்திச்சென்ற பெண் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளைப் பகுதியின் தங்கமலை பெருந்தோட்ட மத்தியிலேயே, மேற்படி மத்திய நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது. ஹப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர தயாரட்னவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்அடிப்படையில் பொலி ஸார் தங்கமலை பெருந்தோட்ட த்தை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்டபோது இந்த மத்திய நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2800 லீட்டர் கசிப்பினைக் கொண்ட பீப்பாக்கள் மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான 'ஸ்பீறிட்' மூலப்பொருட்கள் உள்ளிட்ட பெருந்தொகையிலான உபகரணத் தொகுதிகள் ஆகியனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பதுளை தினகரன் விசேட நிருபர்

Sat, 03/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை